Monday, September 12, 2011

பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்


என்னை பாதித்த செய்தி:- இல்லை சாதித்த  செய்தி........


ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை
பெசன்ட்நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர்திருவிழா களைகட்டியிருந்தது. அன்னை மரியா பவனி வரும் தேரை பார்வையிட வந்தவர்களை அதிகம் கவர்ந்தது, எலியட்ஸ் பீச் சாலையில் வரையப்பட்டிருந்த சிலுவை நாயகன் ஓவியம்தான். இரண்டு கால்களையும் இழந்த வாலிபர் ஒருவர், சிரத்தையுடன் தான் வரைந்த ஓவியத்திற்கு கரி துண்டால் வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.....
சேலத்தை அடுத்த தொப்பூர், உப்பாரப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மனைவி சின்னமயில். இவர்களின் மகன்தான் ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன். குடும்ப வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மணிகண்டன், ரயில்களில் குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்று குடும்பத்திற்கு உதவி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு ரயில் விபத்தில் இரண்டு கால்களை இழந்தார். அதன் பிறகு செய்த தொழில் கைவிட்டுபோனது.வறுமை குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் ஈரோடு சாலையில், ஒரு நபர் சாக்பீஸ்களால் வரைந்த படம் கவர்ந்தது. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். தற்போது, சாலைகளில் ஓவியம் வரைந்து சம்பாதித்து தனக்கும், குடும்பத்திற்கும் தேவையான பணம் சம்பாதித்து வருகிறார்....
இரு கால்களை இழந்த நிலையில் பிச்சை எடுத்து வாழாமல், தனது திறமையைக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் "நடை'போடும் மணிகண்டன் கூறியதாவது: விபத்தில் இரண்டு கால்களையும் இழந்தபின், எனது வாழ்க்கையே இருண்டுபோனது. குடும்ப வறுமை காரணமாக, வீட்டைவிட்டு வெளியேறி சாப்பாட்டிற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன். மனம்போன போக்கில் திரிந்தேன். அப்போது, ஈரோடு பஸ்நிலையத்தில் அப்பாச்சிமுத்து என்பவர், சாலையில் வரைந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் மூன்று மாதம் சாலையில் வரையும் ஓவியம் தொடர்பான பயிற்சி பெற்றேன்.

தற்போது, சாலையில் ஓவியம் வரைந்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் எங்கெங்கு திருவிழாக்கள் நடக்கிறதோ அங்கு சென்று படம் வரைவேன். இதன் மூலம் மாதம் நான்காயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவைக்கு போக மீதியை எனது குடும்ப செலவிற்கு அனுப்பி விடுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரும் உதவிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆர்.சீனிவாசன்
நன்றி -தினமலர் 

உணவு உலகம்  திரு சங்கரலிங்கம் அவர்களின்  
அன்பு தாயார்  மறைவிற்கு...

என் ஆழ்ந்த  இரங்களையும் .... மற்ற அனைத்தையும்விட தாயைப் பிரிவது என்பது ஈடுசெய்யமுடியாத இழப்புதான். 

தங்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..தங்களின் துயர்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் ஏதும் அறிதிடேன் யாம்.
picture corner -what a work 


Post Comment

14 comments:

சேட்டைக்காரன் said...

பாராட்டுக்குரியவர்; அவரது தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

Rathnavel said...

நல்ல செய்தியை பகிர்ந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

NAAI-NAKKS said...

நல்ல செய்தி
நல்ல ஊக்கம் தரும் செய்தி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவருக்கு எனது பாராட்டுக்கள்...! தன்னம்பிக்கை அளிக்கும் பதிவு, நன்றி!

அம்பாளடியாள் said...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .இந்தப் பதிவு
அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்...அருமையான
பகிர்வைத்தந்த உங்களுக்கு மிக்க நன்றி........

தமிழ்வாசி - Prakash said...

இவர்களின் மகன்தான் ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன்.///


சிறந்த முயற்சி... அவரின் தன்னம்பிக்கை அவருக்கு உதவும்...

சி.பி.செந்தில்குமார் said...

உழைப்பு உயர்வு தரட்டும்

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் நண்பா,

உங்களை என்னுடைய வலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://www.thamilnattu.com/2011/09/blog-post_13.html

நிரூபன் said...

தன்னம்பிக்கையோடு செயற்பட்டால், தடைக் கற்களும் படிக்கற்கள் ஆகும் என்பதனை உங்களின் இப் பதிவு மணிகண்டன் அவர்களின் வாழ்க்கையினூடாகச் சொல்லி நிற்கிறது,

ஆப்பிசரின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நானும் உங்களோடு சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

என்ன சொல்வது !!!நெகில்வாய்...இருக்கிறேன்..
நன்றி ! நன்றி !நன்றி !நன்றி !நன்றி !!!
எம் பதிவு உலக தங்ககங்கள்... சிங்கங்கள் .......
தங்களின் வாழ்த்துக்களும் , ஆசிர்வாதங்களும்,
என்னை மேம் மேலும் ஊக்கம் கொடுக்கின்றது .....
இதோ...
இந்த ...சந்தோசங்களையும் ..மகிழ்சிகளையும்
கொஞ்சம் அசை போட்டு விட்டு,,,,
தங்களை தனிதனியய் நன்றி பாரட்டுவேன்.....
இனியவன் ,
அன்புடன் ,
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

உயர்திரு நிரூபன் அவர்களக்கு ,
இந்த...சின்னபயல் "யானை குட்டியை "
தாங்கள் அறிமுகபடுத்தி ....என்னை போன்ற
மொக்கை பதிவரை முக்கியமான பதிவராக ...
பொறுப்புள்ள ...பதிவராக மாற்றிய தங்கள்
அன்புக்கும் ,நட்புக்கும் நான் என்ன செய்வேன் !!!!
மேன் மக்கள் என்றும் மேன் மக்கள்தான் ....
நன்றி !நன்றி !நன்றி !
இனியவன் ,
அன்புடன் ,
யானைக்குட்டி

இராஜராஜேஸ்வரி said...

ஊக்கம் தரும் சிறந்த முயற்சி... அவரின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்களின்
அன்பு தாயார் மறைவிற்கு...


என் ஆழ்ந்த இரங்களையும் .... மற்ற அனைத்தையும்விட தாயைப் பிரிவது என்பது ஈடுசெய்யமுடியாத இழப்புதான்.

தங்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..தங்களின் துயர்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் ஏதும் அறிதிடேன் யாம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thangasivam B.Pharm,M.B.A,DPH said...

உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நண்பா......... வாழ்த்துக்கள்