Wednesday, November 2, 2011

கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு !


(அன்பு பாராட்டிய
பாராட்ட போகிற ...
உள்ளங்களுக்கு
என் இனிய நன்றிகள் ..
ஒரு ஆண் மகன்
பார்வை இது....
காலம் எப்படி ..
ஒருவனை மாற்றுகிறது ..
என்பதன் பார்வை ...
சற்று .........
இயல்பான வாழ்வியல்
கவிதை இது...
தவறுகள் இருந்தால் ,
கண்டால் ...
மன்னிக்கவும் .)


***************************************************


சந்தர்ப்ப  சூழ்நிலைகளில் ...
என் தங்கைகாக,
என் அக்காவுக்காக,
இவனிடம் எப்படி சொல்வது ..
தயங்கினாள் என் தாய்..
 

இலைமறை காயாக ஒரு
துண்டு சீட்டில் எழுதி ...
வாங்கி வாடா ! செல்லம் !
 
அதனை பிரித்து படித்த நொடியில்... 
 
 கொஞ்சமாவது "அறிவு இருக்கா! உனக்கு !'"
 
யார்கிட்ட என்ன சொல்ற....
போ !போயி நீய வாங்கிக்க .....
இந்த மாதறி அசிங்க பிடித்த  ..
வேலை எல்லாம் ..எங்கிட்ட சொன்ன !!
 
ஆம்பளை பையன் எங்கிட்ட
என்ன சொல்றது....
உனக்கு தெரிய வேண்டாம்...
போ ...போ ...
 



போனது  காலம்.....
இன்று அதே..    
சந்தர்ப்ப  சூழ்நிலை.
என் மனைவி  ஜஸ்ட் SMS  பண்ணுகிறாள் ..
ஆபீஸ் வேலை முடித்து ..
கொட்டும் !மழை பாராமல் ...
அண்ணாச்சி கடை சென்று ..
"அண்ணாச்சி ஒரு விஸ்பர் கொடுங்கள் .."
 

அப்போது ! ஏன் என் அம்மாவின் முகம்
ஞாபகம் வருகிறது.!!!!!






********************************
எண்ணம் : எழுத்து
வழக்கம் போல ...
கவிதை என்று நம்பி எழுதும்
(மன்னிக்கவும்) கிறுக்கும்
உங்கள் யானைக்குட்டி ...

Post Comment

25 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பரா கிறுக்கியிருக்கிங்க....


இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

இராஜராஜேஸ்வரி said...

கொஞ்சமாவது "அறிவு இருக்கா! உனக்கு !'"

ADMIN said...

நீங்க கிறுக்கிறதலயும் ஒரு அர்த்தம் இருக்கு..!!

ADMIN said...

இடுகையில் பயன்படுத்தியிருக்கிற படங்கள் இன்னும் சிறப்பு..! வாழ்த்துகள் யானைக்க்குட்டியாரே..!!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
This comment has been removed by the author.
யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

(அன்பு பாராட்டிய
பாராட்ட போகிற ...
உள்ளங்களுக்கு
என் இனிய நன்றிகள் ..
ஒரு ஆண் மகன்
பார்வை இது....
காலம் எப்படி ..
ஒருவனை மாற்றுகிறது ..
என்பதன் பார்வை ...
சற்று .........
இயல்பான வாழ்வியல்
கவிதை இது...
தவறுகள் இருந்தால் ,
கண்டால் ...
மன்னிக்கவும் .)

சக்தி கல்வி மையம் said...

நல்லாத்தான் எழுதி இருக்கீங்க..
சூப்பர்..

K.s.s.Rajh said...

/////இன்று அதே..
சந்தர்ப்ப சூழ்நிலை.
என் மனைவி ஜஸ்ட் SMS பண்ணுகிறாள் ..
ஆபீஸ் வேலை முடித்து ..
கொட்டும் !மழை பாராமல் ...
அண்ணாச்சி கடை சென்று ..
"அண்ணாச்சி ஒரு விஸ்பர் கொடுங்கள் .."


அப்போது ! ஏன் என் அம்மாவின் முகம்
ஞாபகம் வருகிறது.!!!!!////

பாஸ் என்னமா எழுதியிருக்கீங்க உண்மையிலேயே அருமை.....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஆம்பிளப் பிள்ளைங்க உங்க வீராப்பெல்லாம் அம்மாட்ட மட்டும் தானே காட்டுவீங்க.

கோகுல் said...

இயல்பா(பை) எழுதிருக்கீங்க

பால கணேஷ் said...

பல ஆண்கள் மனைவியுடன் வாழும் போதுதான் அம்மாவிற்கு செய்யத் தவறியதை நினைக்கிறார்கள் யானைக்குட்டி சார்! அழகாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்...

செல்வா said...

எனக்கு உங்க பதிவுகள்ல பிடிச்சதே இந்த படங்கள்தான். உண்மைல இத பாக்குறதுக்காகவே உங்க பதிவுக்கு வரலாம். ரொம்ப நல்ல ரசனை உங்களுக்கு :))

செல்வா said...

கவிதை பத்தி சொல்லுறதுனா மேல கணேஷ் சார் சொன்னதுதான் என்னோட கருத்தும் :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம் வாழ்க்கை என்பதே நெருடல் நிறைந்தது இதுபோன்ற சந்தர்ப்பங்களை விட்டுவிட்டு யாரும் வந்துவிடமுடியாது...


அந்த நெருடலான தருணங்களை கவிதையில் கெர்டுத்து அசத்தியுள்ளீர்...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா அருமையா சொல்லிட்டீங்க...!!!

Anonymous said...

யதார்த்தம்...நம் சமூகத்தில்...

அழகாய் வந்திருக்கிறது படைப்பு...


என்னதான் உரிமை என்றாலும் அம்மாவை இப்படி சொல்வதை உரிமையோடு கண்டிக்கிறேன்...

//கொஞ்சமாவது "அறிவு இருக்கா! உனக்கு !'"
//

Unknown said...

அசத்தல்! நிறையப்பேரின் அனுபவம்!!

புதுகை.அப்துல்லா said...

உண்மை.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

நல்லா இருக்கு நண்பா

Vruksha Financial Planners said...

எனது வலையில்,
தங்கம் மற்றும் வெள்ளி, பண்டக சந்தை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள எனது இடுகைகளை பார்க்கவும். நன்றி

ம.தி.சுதா said...

////வழக்கம் போல ...
கவிதை என்று நம்பி////

ஏங்க ரொம்பவே நல்லாத் தானே இருக்கு அப்பறம் ஏன் வம்பு... ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

Anonymous said...

very true........

arul said...

true