Friday, October 28, 2011

என்னை நான் கொன்ற போது!! எழுதிய மரண (மன்னிக்கவும்) மனவாக்கு மூலம் ...


-நீ-
நீயாக இரு .
உன்னுள்
தீயாக இரு .
ஆனாலும்
உனக்கு நீ
தாயாக இரு. 
எதிலும் முதலாக இரு 

முடியாவிட்டாலும் ,
அதன் .....
முடிவாக இரு. .

நோக்கம் தான் ஊக்கம் .
ஊக்கம் தான் ஆக்கம்.
ஓடும்  ஆறாக இரு .
தேங்கும் சேறாக த்திரு.
ததும்பும்   புன்னகையாய் இரு .
மிகவும் தன்மையாய் இரு.
தயக்கத்தை தாண்டி விடு.

உன்னுள் உன்னை தூண்டி விடு.
கற்பனை மூலம் காணும் கனவை விட்டு விடு .
வாழ்வது என்பதுதான் கடவுள் அதை உணர்ந்திடு.  
மூச்சு  உள்ளவரை முயற்சி  தான்  என்றிரு.

போன  காலம் ..போகட்டும்  பொறுத்திடு ..
வாழும் காலம்    வசந்தமாக்கி  வாழ்த்திடு .
 
கவிதை என்று
நம்பி எழுதியது
 -உங்கள்  நண்பன் -
-யானை குட்டி -

Post Comment

20 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

தத்துவக் கவிதை சூப்பர்ப் மக்கா வாழ்த்துக்கள்...!!!

settaikkaran said...

நேர்முகமான சிந்தனை! சபாஷ்! :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட... தலைப்பை பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேன்...
கவித... கவித...

SURYAJEEVA said...

கவிதை என்று நம்பி எழுதியதா?
தன்னடக்கமா?

இவ்வளவு அருமையா எழுதியிருக்கீங்க..
முதல்ல கைய கொடுங்க பாஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கருத்துக்கள் நண்பா.......

ADMIN said...

கவிதையில் கருத்துக்கள் இருக்க வேண்டும். வெறும் வார்த்தைகள் இருந்தால் அது கவிதை அல்ல..! நீங்கள் எழுதியது கவிதைதான் என்பதில் மேற்சொன்ன கருத்துகளிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்..

அருமையான, அர்த்தமுள்ள வார்த்தைகளின் கோர்வையில் உங்கள் கவிதை மிளிர்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..!!

Unknown said...

அருமை

K.s.s.Rajh said...

////உன்னுள் உன்னை தூண்டி விடு.
கற்பனை மூலம் காணும் கனவை விட்டு விடு .
வாழ்வது என்பதுதான் கடவுள் அதை உணர்ந்திடு.
மூச்சு உள்ளவரை முயற்சி தான் என்றிரு./////

அழகு...........நல்ல வரிகள்

குடந்தை அன்புமணி said...

அருமை... அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தன்னம்பிக்கையோடு வாழ்பவர்கள் மரணத்தைப்பற்றி யோசிப்பதில்லை...


தன்னம்பிக்கையோடு வாழ்வோம்...

காந்தி பனங்கூர் said...

//எதிலும் முதலாக இரு
முடியாவிட்டாலும் ,
அதன் ..... முடிவாக இரு. //

அனைத்தும் அருமையான வரிகள். அதிலும் மேலே உள்ள வரிகள் மிகவும் சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள்

J.P Josephine Baba said...

சூப்பர் !!!! தலைப்பு சம்பந்தமில்லாததா?

சக்தி கல்வி மையம் said...

தன்னம்பிக்கை வரிகள்.,

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

பதிவு உலக -சிங்கங்கள், இராஜராஜேஸ்வரி said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...
Blogger சேட்டைக்காரன் said...
Blogger தமிழ்வாசி - Prakash said...
Blogger suryajeeva said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
Blogger தங்கம்பழனி said...
Blogger விக்கியுலகம் said...
Blogger K.s.s.Rajh said...
Blogger குடந்தை அன்புமணி said...
Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...
Blogger காந்தி பனங்கூர் said...
Blogger J.P Josephine Baba said...
Blogger !* வேடந்தாங்கல் - கருன்

என் இனிய
அன்பு உள்ளங்களுக்கு,
என்னை பாராட்டி,
ஊக்கம் கொடுத்த..
தங்களின்
அன்புக்கு,
இந்த யானை குட்டி தலை வணங்கி.
நன்றிகள் மேலும் நன்றிகள்
சொல்கின்றான் .

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

பதிவு உலக -சிங்கங்கள்,

இராஜராஜேஸ்வரி said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...
Blogger சேட்டைக்காரன் said...
Blogger தமிழ்வாசி - Prakash said...
Blogger suryajeeva said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
Blogger தங்கம்பழனி said...
Blogger விக்கியுலகம் said...
Blogger K.s.s.Rajh said...
Blogger குடந்தை அன்புமணி said...
Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...
Blogger காந்தி பனங்கூர் said...
Blogger J.P Josephine Baba said...
Blogger !* வேடந்தாங்கல் - கருன்

என் இனிய
அன்பு உள்ளங்களுக்கு,
என்னை பாராட்டி,
ஊக்கம் கொடுத்த..
தங்களின்
அன்புக்கு,
இந்த யானை குட்டி தலை வணங்கி.
நன்றிகள் மேலும் நன்றிகள்
சொல்கின்றான் .

கோகுல் said...

வாழ்த்துக்கள்!

நம்புங்க இது கவிதைதான்!

சிவகுமாரன் said...

அருமை.
\\தேங்கும் சேறாக த்திரு.//
சேறாகா திரு
என மாற்றி விடுங்கள்.

nellai ram said...

வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

அருமையான கவிதைப்பகிர்வு வாழ்த்துக்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு .............