Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts
Monday, October 17, 2011
மிக! மிக! மிக! சிறிய பதிவு .....
Labels:
கவிதை,
செய்தி,
தற்போதைய செய்தி,
பொது,
வாழ்கை
Friday, October 14, 2011
தமிழ் மணம்- வாங்க!!!பழகலாம் (மன்னிக்கவும்) தகுதி இல்லை ! வாங்க விலகலாம்!!!!
பதிவு உலகில் "நாங்கள்"
மிகவும் மென்மையானவர்கள் !
மிகவும் மென்மையானவர்கள் !
எங்கள் இதயங்களை கிழித்தால்...
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
மட்டும். எப்போதும் காணலாம் ....
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
மட்டும். எப்போதும் காணலாம் ....
எனது சக நண்பனின். மற்றும்
நண்பனின் நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது மற்றும் எங்களின்
வழி மற்றும் வலி.!
நண்பனின் நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது மற்றும் எங்களின்
வழி மற்றும் வலி.!
இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
நாங்கள் அன்பின் ஏசு தான்! அது .
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
எதிரி என்றாலும் எங்களை....
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
வேண்டாம் ...........
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!! இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!! இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!
அன்புடன்
யானைக்குட்டி
யானைக்குட்டி

கண்டனம் !!!!!
என் குழந்தை இட்ட,
முத்தத்தின்,,,,,,,,,,,
ஈரத்தை .....நான்!
முழுமையாக ....
உணர்வதற்குள் ,,,,
களவாடியது காற்று.
-யானை குட்டி -
-------------------------------------------------------------------------
நான் ஒரு கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரொம்ப பிடிக்கும் .
ரஜினி பிடிக்க பல காரணம் உண்டு .
அதில் இதுவும் உண்டு .
ரஜினி சொல்லும் கவலை போக்கும் வழி.
மக்கள் கூடும் இடம் ...மகாலட்சுமி வாசம் செய்வாள் ...என்ற கருத்து.
தான் தண்ணி அடித்த கதை ....தான் சொத்து வாங்கிய கதை ....
அசத்தல் வீடியோ ......
------------------------------------
இந்த வீடியோ பார்க்க ஆடியோ தேவை இல்லை! ஆர்வம் மட்டும் போதும் .
--------------------------------------------------
என் இனிய அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் .
ஒரு அன்பின் போட்டி .....
இந்த படம் என்னமோ !சொல்கிறது ..
அது நான்கு வரி கவிதையாக இருக்கலாம் .
அல்லது நான்கு வரி வார்த்தையாக இருக்கலாம் .
என்னமோ !எனக்கு பிடிபடவில்லை ?
நீங்கள் சொல்லுங்கள் ..
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஒரு இனிய எளிய அன்பு பரிசு
உண்டு ,
"மெகா அன்பு பரிசு " நச்சுனு.. சொல்லும் ...
மூவர்க்கு..
வரும் ---25 /11 /2011 --க்குள் ..நச்சுனு.. சொல்லுங்கள் ...
Post Comment
Labels:
viedeo வீடியோ,
கவிதை,
காமெடி,
செய்தி,
தற்போதைய செய்தி,
நகைச்சுவை,
வாழ்கை
Wednesday, September 21, 2011
உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு
அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!
பெருமக்களே, மாணவர்களே, இளைஞர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
எண்ணங்கள் செயலாகின்றன.
ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்
போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.
ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்
செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்
சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.
ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்.
ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்
போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.
ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்
செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்
சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.
ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்.
இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும்
வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும்
மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த
வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.
நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு
இலட்சியம் வேண்டும்.
அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்
உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.
நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன்,
வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,
கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால்
வெற்றியடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம்
இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள்
இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என்
நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.
1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது
வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லை. அது
எவ்வாறு முடியும்.
பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய
உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு
காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்?
கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.
எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள். எத்தனை
பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.
அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள்
வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால்
முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை
உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.
எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய
சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.
பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா
60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.
உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,
இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம்
நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.
அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.
அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால், அதற்கு ஓரு
சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி
கற்பனை சக்தி
கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது
கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?..........
மகானாக்குகிறது.
கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன
வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.
மனத்தூய்மை
எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.
எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.
மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.
உள்ள உறுதி
புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.
நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள்
இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும்,
நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.
நீங்கள் என்னை www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
Thanks-Thatstamil
Post Comment
Labels:
இன்றைய செய்தி,
செய்தி,
தற்போதைய செய்தி,
பொது,
வாழ்கை
Thursday, September 15, 2011
அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...
என் சொந்த கற்பனை மட்டுமே!!
இப்போது உயிர்ரோடு ,அல்லது மறைந்த எவரையும் குறிபிடுவன அல்ல !!!!!
யாராவது என்னை உதைக்க விரும்பினால்!! ஆள் வைத்து அடிக்க விரும்பினாலும் !!!
நான் அம்புட்டு வோர்த்து இல்லைங்க !!! ஆனா உங்க கருத்த மட்டும் பதிவு பண்ணுங்க .!!
பொறுப்ப பதில் சொல்வேங்க !!!!
அம்புட்டு தானுங்கோ!!!!!
இப்போது உயிர்ரோடு ,அல்லது மறைந்த எவரையும் குறிபிடுவன அல்ல !!!!!
யாராவது என்னை உதைக்க விரும்பினால்!! ஆள் வைத்து அடிக்க விரும்பினாலும் !!!
நான் அம்புட்டு வோர்த்து இல்லைங்க !!! ஆனா உங்க கருத்த மட்டும் பதிவு பண்ணுங்க .!!
பொறுப்ப பதில் சொல்வேங்க !!!!
அம்புட்டு தானுங்கோ!!!!!
அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் .
உங்கள்கு சம்பளம் சாப்ட் வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 ரெடி .....
உண்மைதான் . சும்மா இல்லை!!!நம்ம கவர் மென்ட் ஆர்டர் அப்படி ....
தகுதி : சுமாரான படிப்பு !! ரொம்ப சுமாரான பொது அறிவு ...
பணியிடம் : தமிழக சட்ட சபை .....
வேலை:- அப்படி கேளுங்க!!!
நம்ம சட்ட மன்ற மேஜய் தட்டும் வேலை ...
புரியல !!! கொஞ்சம் விளக்மா சொல்லவா ....
நண்பா...யாராவது பேசுனா... புரியலயா ..உடன் மேஜய் தட்டனும் !.....
கண்டிப்பா வெள்ளை வெட்டி ,வெள்ளை சட்டைதான் போடணும் !!...
கசாப்பு கடை ஆடு மாத்ரி முழிக்கணும்!!! ....
பொது அறிவு சுத்தம் .சுத்தமா இருக்க கூடாது..!!!..
எதையாவது எழதி வச்சி தான் ....படிக்கணும் .!!
முக்கியமா கருப்பு கண்ணாடி போடணும் .!!!..
ஊரு பக்கம் தலை கட்ட கூடாது....!!!
தின்னா தமிழு! துங்கனா தமிழு! தேவை இல்லமா... பேசுனும்!!!...
முக்கியமா டெய்லி டை அடிக்கணும் .!!!!..
எதுக்கு போறோம் என்று தெரியாமல் ...சட்ட மன்றத்துக்கு போகணும் !!!!.
அங்க!!!என்ன பேச...போறோம் என்று தெரியாமல் .......
க்வாட்டர் அடித்த குரங்கு போல உட்காந்து இருக்கணும் ..
வேற வேலை இருந்தா ஒபி அடிக்க வெளி நடப்பு செய்யணும் .
புள்ளைகளை கான்வென்ட் படிப்பு படிக்க வைக்கணும் ..
வெருப்பா இருந்தால் ....வெளிநாடு போகலாம் ...
குளிர இருந்தால் கொடைக்கானல் போகலாம் ..!!!
எதிர்கட்சி ஆள்களை பார்த்தால்!!!
இஞ்சி தின்ன மங்கி போல .எப்பொதும் ...
முகத்தை உம்ம்னு வைக்கணும் !!!!
எங்க போனாலும்.. முக்கா லூசு மாத்ரி வேகமாக தான் போகணும்... .நடந்து .. போனாலும் ...கூட..
எப்ப பார்த்தாலும் புரியாத மாதிரி பேசியும் .!!!..
புள்ளி விபரம் சொல்லியும் கடுப்பு ஏத்தனும்!!!!
எந்த மேடை...கெடைத்தாலும் காட்டு எருமைக்கு ...
கரண்டு ஷோக் குடுத்த மாதரி கத்தனும் .!!!!!...
யாருக்கும் எந்த நல்லதும் செய்ய வேண்டாம் !!!
இந்த தகுதிகள் உங்களக்கு இருந்தால் மட்டும் தான் இந்த வேலை கிடைக்கும் ...
உங்கள்கு எப்படி வசதி !!!!
கொசறு செய்தி: நம்ம எதிர்கட்சி தலிவர் விஜயகாந்து சம்பளம் எம்புட்டு தெரியுமா ?
ரூபாய் ---31,500 /-
EXECLIVE அடுத்த பதிவு கவெர்னர் வேலை காலி !!! ஆர் யு ரெடி ???????? (இன்னும் விளக்கமாக)
Post Comment
Labels:
notice board,
இன்றைய செய்தி,
செய்தி,
நகைச்சுவை,
நையாண்டி,
பொது,
வாழ்கை,
வீடியோ
Monday, September 12, 2011
பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்
என்னை பாதித்த செய்தி:- இல்லை சாதித்த செய்தி........
![]() |
| ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன் |
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை
பெசன்ட்நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர்திருவிழா களைகட்டியிருந்தது. அன்னை
மரியா பவனி வரும் தேரை பார்வையிட வந்தவர்களை அதிகம் கவர்ந்தது, எலியட்ஸ்
பீச் சாலையில் வரையப்பட்டிருந்த சிலுவை நாயகன் ஓவியம்தான். இரண்டு
கால்களையும் இழந்த வாலிபர் ஒருவர், சிரத்தையுடன் தான் வரைந்த ஓவியத்திற்கு
கரி துண்டால் வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.....
சேலத்தை அடுத்த தொப்பூர், உப்பாரப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர்
அம்மாசி. இவரது மனைவி சின்னமயில். இவர்களின் மகன்தான் ஓவியத்தை வரைந்துக்
கொண்டிருந்த மணிகண்டன். குடும்ப வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்போடு படிப்பை
நிறுத்திய மணிகண்டன், ரயில்களில் குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்று
குடும்பத்திற்கு உதவி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு ரயில் விபத்தில் இரண்டு
கால்களை இழந்தார். அதன் பிறகு செய்த தொழில் கைவிட்டுபோனது.வறுமை குடும்ப
சூழ்நிலை காரணமாக, வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் ஈரோடு சாலையில், ஒரு
நபர் சாக்பீஸ்களால் வரைந்த படம் கவர்ந்தது. அவரிடம் பயிற்சி எடுத்துக்
கொண்டார். தற்போது, சாலைகளில் ஓவியம் வரைந்து சம்பாதித்து தனக்கும்,
குடும்பத்திற்கும் தேவையான பணம் சம்பாதித்து வருகிறார்....
தற்போது, சாலையில் ஓவியம் வரைந்து வாழ்க்கை நடத்தி வருகிறேன்.
தமிழகத்தில் எங்கெங்கு திருவிழாக்கள் நடக்கிறதோ அங்கு சென்று படம் வரைவேன்.
இதன் மூலம் மாதம் நான்காயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவைக்கு
போக மீதியை எனது குடும்ப செலவிற்கு அனுப்பி விடுகிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரும் உதவிக்காக விண்ணப்பித்து
காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆர்.சீனிவாசன்
நன்றி -தினமலர்
picture corner -what a work
உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்களின்
அன்பு தாயார் மறைவிற்கு...
என் ஆழ்ந்த இரங்களையும் ....
மற்ற அனைத்தையும்விட தாயைப் பிரிவது என்பது ஈடுசெய்யமுடியாத இழப்புதான்.
தங்களுக்கு
எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..தங்களின் துயர்வுக்கு எமது
ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் ஏதும்
அறிதிடேன் யாம்.
picture corner -what a work
Post Comment
Labels:
இன்றைய செய்தி,
செய்தி,
பொது,
வாழ்கை
Subscribe to:
Posts (Atom)

















