Friday, October 28, 2011

என்னை நான் கொன்ற போது!! எழுதிய மரண (மன்னிக்கவும்) மனவாக்கு மூலம் ...


-நீ-
நீயாக இரு .
உன்னுள்
தீயாக இரு .
ஆனாலும்
உனக்கு நீ
தாயாக இரு. 
எதிலும் முதலாக இரு 

முடியாவிட்டாலும் ,
அதன் .....
முடிவாக இரு. .

நோக்கம் தான் ஊக்கம் .
ஊக்கம் தான் ஆக்கம்.
ஓடும்  ஆறாக இரு .
தேங்கும் சேறாக த்திரு.
ததும்பும்   புன்னகையாய் இரு .
மிகவும் தன்மையாய் இரு.
தயக்கத்தை தாண்டி விடு.

உன்னுள் உன்னை தூண்டி விடு.
கற்பனை மூலம் காணும் கனவை விட்டு விடு .
வாழ்வது என்பதுதான் கடவுள் அதை உணர்ந்திடு.  
மூச்சு  உள்ளவரை முயற்சி  தான்  என்றிரு.

போன  காலம் ..போகட்டும்  பொறுத்திடு ..
வாழும் காலம்    வசந்தமாக்கி  வாழ்த்திடு .
 
கவிதை என்று
நம்பி எழுதியது
 -உங்கள்  நண்பன் -
-யானை குட்டி -

Post Comment